நீதிமொழிகள் 1:5 11:14 15:22 16:31 19:20 20:5,18 Proverbs 1:5 11:14 15:22 16:31 19:20 20:5,18 லேவியராகமம் 19:32 Leviticus 19:32
நீதிமொழிகள் 16:31
நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்.
Proverbs 16:31
White hair is a crown of glory, if it is found in the way of righteousness.
லேவியராகமம் 19:32
நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படுவாயாக, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் கர்த்தர்.
Leviticus 19:32
You shall rise up before the gray headed, and honor the face of the old man, and fear your GOD: I am the LORD.
நீதிமொழிகள் 1:5
புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடைந்து;
Proverbs 1:5
A wise man will hear, and will increase learning; and a man of understanding shall attain unto wise counsels:
நீதிமொழிகள் 11:14
ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.
Proverbs 11:14
Where no counsel is, the people fall: but in the multitude of counselors there is safety.
நீதிமொழிகள் 15:22
ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.
Proverbs 15:22
Without counsel plans go wrong: but in the multitude of counselors they are established.
நீதிமொழிகள் 19:20
உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.
Proverbs 19:20
Hear counsel, and receive instruction, that you may be wise in your latter days.
நீதிமொழிகள் 20:5
மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்.
Proverbs 20:5
Counsel in the heart of man is like deep water; but a man of understanding will draw it out.
நீதிமொழிகள் 20:18
ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படும்; நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு.
Proverbs 20:18
Every purpose is established by counsel: and with good advice wage war.