2கொரிந்தியர் 8:21 2Corinthians 8:21
கொலோசெயர் 3:9,10 Colossians 3:9,10 கொலோசெயர் 3:22-24 Colossians 3:22-24
எபேசியர் 4:24,25 Ephesians 4:24,25
நீதிமொழிகள் 10:9 Proverbs 10:9
2கொரிந்தியர் 8:21
கர்த்தருக்கு முன்பாகமாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம்.
2Corinthians 8:21
Providing for honest things, not only in the sight of the LORD, but also in the sight of men.
கொலோசெயர் 3:9,10
9. ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,
10. தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே.
Colossians 3:9,10
9. Lie not one to another, seeing that you have put off the old man with his deeds;
10. And have put on the new man, that is renewed in knowledge after the image of him that created him:
கொலோசெயர் 3:22-24
22. வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள்.
23. நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து,
24. எதைச் செய்தாலும் அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.
Colossians 3:22-24
22.Servants, obey in all things your masters according to the flesh; not with eye service, as men pleasers; but in singleness of heart, fearing GOD:
23. And whatsoever you do, do it heartily, as to the LORD, and not unto men;
24. Knowing that of the LORD you shall receive the reward of the inheritance: for you serve the LORD CHRIST.
எபேசியர் 4:24,25
24.மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.
25. அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன்.
Ephesians 4:24,25
24.And that you put on the new man, which after GOD is created in righteousness and true holiness.
25. Therefore putting away lying, speak every man truth with his neighbor: for we are members one of another.
நீதிமொழிகள் 10:9
உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்.
Proverbs 10:9
He that walks uprightly walks securely: but he that perverts his ways shall be known.