Bible Words | Isaiah 44 : 16 - 22 ஏசாயா | Bro Vinthan | Heavinly Voice
Backround Music & Voice | Bro. A. Vinthan
To Contact:
+94774530159 - Mobile
+94774230159 - WhatsApp
Recorded,Mixedand Mastered : Heavenly Voice Studio | Mullaitivu | Sri Lanka
Share | Like | Comment if you enjoyed our Video!..
Subscribe to our YouTube channel for more upcoming videos!...
6 நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே, என்னைத்தவிரத் தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.
ஏசாயா 44:6
7 பூர்வகாலத்து ஜனங்களை நான் ஸ்தாபித்தது முதற்கொண்டு, என்னைப்போல எதையாகிலும் வரவழைத்து, இன்னின்னதென்று முன்னறிவித்து, எனக்கு முன்னே வரிசையாக நிறுத்தத்தக்கவன் யார்? நிகழ்காரியங்களையும் வருங்காரியங்களையும் தங்களுக்கு அவர்கள் அறிவிக்கட்டும்.
ஏசாயா 44:7
8 நீங்கள் கலங்காமலும் பயப்படாமலும் இருங்கள், அக்காலமுதற்கொண்டு நான் அதை உனக்கு விளங்கப்பண்ணினதும் முன்னறிவித்ததும் இல்லையோ? இதற்கு நீங்களே என் சாட்சிகள், என்னைத்தவிரத் தேவனுண்டோ? வேறொரு கன்மலையும் இல்லையே, ஒருவனையும் அறியேன்.
ஏசாயா 44:8
9 விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர், அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது, அவைகள் ஒன்றும் காணாமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள்.
ஏசாயா 44:9
10 ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை உருவாக்கி, விக்கிரகத்தை வார்ப்பிக்கிறவன் எப்படிப்பட்டவன்?
ஏசாயா 44:10
11 இதோ, அவனுடைய கூட்டாளிகளெல்லாரும் வெட்கமடைவார்கள், தொழிலாளிகள் நரஜீவன்கள்தானே, அவர்கள் எல்லாரும் கூடிவந்து நிற்கட்டும், அவர்கள் ஏகமாய்த் திகைத்து வெட்கப்படுவார்கள்.
ஏசாயா 44:11
12 கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன் புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான், பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான், தண்ணீர் குடியாமல் களைத்துப்போகிறான்.
ஏசாயா 44:12
13 தச்சன் நூல்பிடித்து, மட்டப்பலகையால் மரத்துக்குத் குறிபோட்டு, உளிகளினால் உருப்படுத்தி, கவராசத்தினால் அதை வகுத்து, மனுஷ சாயலாக மனுஷரூபத்தின்படி உருவமாக்குகிறான், அதைக் கோவிலிலே நாட்டி வைக்கிறான்.
ஏசாயா 44:13
14 அவன் தனக்குக் கேதுருக்களை வெட்டுகிறான், ஒரு மருதமரத்தையாவது ஒரு கர்வாலிமரத்தையாவது, தெரிந்துகொண்டு, காட்டுமரங்களிலே பெலத்த மரத்தைத் தன் காரியத்துக்காக வளர்க்கிறான், அல்லது அசோகமரத்தை நடுகிறான், மழை அதை வளரச்செய்யும்.
ஏசாயா 44:14
15 மனுஷனுக்கு அவைகள் அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான், நெருப்பைமூட்டி அப்பமும் சுடுகிறான், அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டுபண்ணி, அதைப் பணிந்துகொள்ளுகிறான், ஒரு விக்கிரகத்தையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான்.
ஏசாயா 44:15
16 அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான், ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்துப் புசித்து, பொரியலைப் பொரித்து திருப்தியாகி, குளிருங்காய்ந்து: ஆஆ, அனலானேன், நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி,
ஏசாயா 44:16
17 அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி: நீ என் தெய்வம், என்னை இரட்சிக்கவேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான்.
ஏசாயா 44:17
18 அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது.
ஏசாயா 44:18
19 அதில் பாதியை அடுப்பில் எரித்தேன், அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்துப் புசித்தேன், அதில் மீதியான துண்டைநான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை, அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை.
ஏசாயா 44:19
20 அவன் சாம்பலை மேய்கிறான்; வஞ்சிக்கப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்; என் வலதுகையிலே அபத்தம் அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான்.
ஏசாயா 44:20
21 யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை, நீ என் தாசன், நான் உன்னை உருவாக்கினேன், நீ என் தாசன், இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை.
ஏசாயா 44:21
22 உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன், என்னிடத்தில் திரும்பு, உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.
ஏசாயா 44:22