பதிவு 102 - Today's Promise - 79 | Jeremiah 10:16 | இன்றைய வாக்குத்தத்தம் - 79 | எரேமியா 10:16
என் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் அன்புள்ள சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்!
இந்த காணொளியானது பரிசுத்த வேதாகமம் எனும் மெய் மறையில் உள்ள நம் ஆண்டவர் இயேசு கிறித்து கொடுத்த வாக்குத்தத்தங்களில் இருந்து அன்றாடம் ஒரு வாக்குத்தத்தம் பற்றியது.
என் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் அன்புள்ள அனைவருக்கும் வணக்கம்!
இறை வாழ்த்து:
நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
(ரோமர் 1:3)
யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப் போல் அல்ல, அவர் சர்வத்தையும் உருவாக்கினவர், இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம், சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
எரேமியா 10:16
அன்புள்ள சகோதர சகோதரிகளே! இந்த வசனமானது யாக்கோபின் தேவன் எப்படிப்பட்டவர் என்று அவரது சிறப்புகளை எடுத்துக் கூறும் விதமாக சொல்லப்பட்டுள்ளது.
கோலும் கையுமாக உயிருக்கு பயந்து தன் சகோதரன் ஏசாவின் கைகளுக்கு தப்பி ஓடிய யாக்கோபு தன் மாமனாகிய லாபானால் வஞ்சிக்கப்பட்டு பத்து முறை சம்பளத்தை மாற்றிய போதும் தேவனையே தன் வாழ்நாளில் சார்ந்திருந்தார் என்று பார்க்கிறோம்!
ஆகவே தேவனாகிய கர்த்தர் தன்னை யாக்கோபின் பங்காக அடையளப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறார்.
அப்படி யாக்கோபின் பங்காக உள்ள தேவனாகிய கர்த்தர் அவைகளைப் போல் அல்ல!
எவைகளைப் போல்? உயிரல்லாத விக்கிரகங்களைப் போல் அல்ல! ஏனென்றால் தேவனாகிய கர்த்தர் ஜீவனுள்ளவர்!
சர்வம் என்றால் அனைத்தும் என்று பொருள்! அவர் படைப்புகள் அனைத்தும் அவரால் உண்டாக்கப்பட்டது. அவரே உருவாக்கினார்!
அப்படி இந்த உலகை மட்டுமல்லாது பேரண்டத்தையே படைத்தவர் இஸ்ரவேலை தனக்கு சுதந்தரமான கோத்திரமாக வைக்கிறார்.
யாக்கோபு தேவனின் தூதனானவரோடு போராடி வென்றபின் அவருக்கு இஸ்ரவேல் என்று பெயரிடுகிறார்.
கோத்திரம் என்றால் திரளான கூட்டம் என்று பொருள்! ஒரே குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக வரும் ஆண்வழி வர்க்கத்தை கோத்திரம் எனும் சமசுகிருதச் சொல் குறிக்கும்.
அப்படி ஆபிரகாம் தேவன் மேல் வைத்த விசுவாசத்தினிமித்தம் தன் முதிர்வயதில் பெற்ற மகனாகிய ஈசாக்கை தேவன் சொன்னார் என்பதற்காக சிறிதும் யோசிக்காமல் பலியிட துணிந்ததினால் அவரது பெயரைக் கொண்டு தன்னை ஆபிரகாமின் தேவன் என்றும்,
ஆபிரகாம் தன்னைத் தேவனுக்கு பலியாக கொடுக்கப் போகிறார் என்று தெரிந்த பின்னும் எதிர்க்காமல் ஈசாக்கு தன்னை ஒப்புக்கொடுத்ததினித்தம் ஆபிரகாமிற்கு பின் தன்னை ஈசாக்கின் தேவன் என்றும்
அவருக்கு பின் யாக்கோபு தன்னை விசுவாசித்து சார்ந்து கொண்டதினிமித்தம் யாக்கோபின் தேவன் என்றும் அடையாளப்படுத்திக் கொண்டார்.
ஆகவே தான் இஸ்ரவேலை தனது தனக்கு சுதந்தரமான கோத்திரமாக அறிவிக்கிறார். சுதந்திரம் என்பதற்கு உரிமையான என்ற பொருளும் உள்ளது.
அப்படிப்பட்ட தேவனின் நாமம் அதாவது பெயர் என்னவென்றால் சேனைகளின் கர்த்தர் என்று கூறுகிறார்.
ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன், யாக்கோபின் தேவன் என்று அழைக்கப்பட விரும்பிய தேவன் யாக்கோபிற்கு பின் அவரது பன்னிரெண்டு குமாரர்கள் வழியாக
வானத்து விண்மீன்களைப் பலவும் கடற்கரை மணலை போலவும் இஸ்ரவேலர்கள் பெருகினதினிமித்தம்
தன்னை தனி ஒரு மனிதனின் பெயரால் அழைப்பதற்கு பதிலாக சேனைகளின் கர்த்தர் என்று அழைத்துக் கொண்டார்.
மேற்கோள் வசனம்:
நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது.
யாத்திராகமம் 12:41
இந்த வசனம் இன்று நமக்கும் பொருந்தும்படியாக உள்ளது.
ஜீவனில்லாத விக்கிரகங்கள் மேல் நம்பிக்கை வைக்காமல் ஜீவனுள்ள தேவனாகிய நம் கர்த்தர் மீது விசுவாசம் வைத்து
நம் வாழ்நாள் முழுவதும் அவரை மட்டுமே சார்ந்து அவருக்கு ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபைப் போல கீழ்படிந்து வாழ்ந்தால்
தேவனாகிய கர்த்தர் நம் ஒவ்வொருவருடைய தேவன் என்று அழைக்கப்படுவதில் மகிழ்ச்சி அடைவார். நம்மை அவரது கோத்திரமாகவும் அவருக்கு சுதந்தரமாகவும் வைப்பார்.
நாமும் தேவனை விசுவாசித்து கீழ்படிவோமாக!
தேவனுக்கே புகழ் உண்டாகுக!
இறை வாழ்த்து:
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
(2.கொரிந்தியர் 13:14)
#bible #இன்றையவாக்குத்தத்தம் #Jeremiah #Today's_Promise #Biblescriptures #Bibleverses #reading #biblereading #biblestudy #Oldtestament
#Newtestament
Video by Suzy Hazelwood from Pexels
Video by Fernando Vilasboas from Pexels
Photo by Krivec Ales from Pexels
Photos by Pixabay
In English :
This video is about Today's Promise from the Holy Bible. The book of Jeremiah says
He who is the Portion of Jacob is not like these, for he is the Maker of all things,
including Israel, the people of his inheritance— the Lord Almighty is his name. (NIV)
Jeremiah 10:16
Please do subscribe my channel for further biblical videos :
Mei Marai மெய் மறை :
https://www.youtube.com/channel/UCZAKjysDu1-MWKSQvwVs-2Q
My another channels (In Tamil Language) :
Anthuvan Eraikodai:
https://www.youtube.com/channel/UCmrDC5L6ohZX9z4wft6mIsQ
மறத்தமிழ் நாடு (Maraththamizh Naadu):
https://www.youtube.com/channel/UCMvgyCiQ_ysHk2CyUZ6FeyA
Please do subscribe for further music meditation videos Yaazh Music Meditation :
https://www.youtube.com/channel/UCt3g6RPM1ZtT6vXjlw6h1hQ