பதிவு 115 - Today's Promise - 92 | Psalms 25:12 | இன்றைய வாக்குத்தத்தம் - 92 | சங்கீதம் 25:12
என் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் அன்புள்ள சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்!
இந்த காணொளியானது பரிசுத்த வேதாகமம் எனும் மெய் மறையில் உள்ள நம் ஆண்டவர் இயேசு கிறித்து கொடுத்த வாக்குத்தத்தங்களில் இருந்து அன்றாடம் ஒரு வாக்குத்தத்தம் பற்றியது.
என் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் அன்புள்ள அனைவருக்கும் வணக்கம்!
இறை வாழ்த்து:
நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
(ரோமர் 1:3)
கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.
சங்கீதம் 25:12
அன்புள்ள சகோதர சகோதரிகளே!
இந்த வசனம் சங்கீதத்தில் தாவீது தனது இளவயதின் பாவங்களை மன்னிக்கும்படி தேவனிடம் கேட்டு தேவனின் இரக்க குணத்தைப் பற்றி பேசும் போது சொல்லப்பட்ட வசனமாகும்.
இந்த வசனம் நமக்கு வாக்குத்தத்தமாக நமக்கு அமைந்துள்ளதை உறுதிப்படுத்தும் நிகழ்வு புதிய ஏற்மாட்டில் உள்ளது.
அப்போஸ்தலர் 10 அதிகாரத்தில் கொர்நேலியு எனும் நூற்றுக்கு அதிபதியில் வாழக்கை நமக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டக அமைந்து நமக்கு தேவனுடைய வசனங்கள் எவ்வளவு உண்மையானவைகள் என்பதை வெளிப்படுத்தி நம்பிக்கையூட்டுகிறது.
அவன் தேவபக்தியுள்ளவனும் தன்வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான்.
என்று அப்போஸ்தலர் 10:2 கூறுகிறது.
கொர்நேலியு மற்ற நற்குணங்களோடு கூடவே தேவனாகிய கர்த்தருக்கு பயப்படுகிறவராக இருந்ததின் நிமித்தமே கர்த்தர் தமக்கு ஏற்ற நேரத்தில் தேவதூதனை அனுப்பி தேவமனுசனாகிய பேதுருவை அழைத்து வரும்படி கூறி பேதுரு வாயிலாக ஞானஸ்நானம் கொடுக்க செய்கிறார்.
தாம் தெரிந்துக் கொள்ளும் வழியைப் போதிப்பார் என்பது இந்த நிகழ்வில் எத்தனை அருமையாக நடந்துள்ளதை பார்க்கமுடியும்.
கொர்நேலியு ஏதோ கொஞ்ச காலம் நன்மைகள் செய்யவில்லை. அவர் செய்த தருமங்களும், ஜெபங்களும் தேவசந்நிதியில் சென்று எட்டும் அளவிற்கு செய்து கொண்டேயிருந்ததால் கர்த்தர் அவரது வழியை கொர்நேலியுவுக்கு தேவதூதன் வழியாக தெரியபடுத்துகிறார்.
அதன்படி கொர்நேலியு பேதுருவை அழைத்துவர ஆட்களை அனுப்பியபோது, அவர்கள் வந்து சேரும் முன்பு பேதுருவின் மனதை அவரது புரிதலை சரிபடுத்தி தரிசனம் வழியாக ஆயத்தப்படுத்துகிறார்.
பேதுரு ஏற்றுக்கொண்டு கொர்நேலியுவின் வீட்டிற்கு செல்லும் போது அவர் அவரது குடும்பத்தார் மட்டும் பயன்பட்டால் போதும் என்று நினையாமல் தன் உறவினர்களையும், நண்பர்களையும் பேதுருவின் போதகத்தைக் கேட்க தன் வீட்டிற்கு அழைத்துக் காத்திருந்தார் என்று 24ம் வசனத்தில் பார்க்கிறோம்.
கொர்நேலியு எவ்வளவு நல்ல மனிதர் என்பதற்கும், கர்த்தருக்கு பயப்படுகிறவர் என்பதற்கும் இதுவே சான்றாக உள்ளது.
நாமும் வெறுமனே நமக்காக மட்டும் ஜெபிக்கிறவர்களாக இல்லாமல் கொர்நேலியு போல ஜெபிப்பதுடன், "உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு" என்கிற நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சொல்படி தானதருமங்கள் செய்கிறவர்களாகவும்,
இரட்சிப்பை நம் குடும்பத்தார், உறவினர்கள் நண்பர்கள் என அனைவருக்கும் கிடைக்கத்தக்கதாக அறிவிக்கிறவர்களாகவும் எல்லாவற்றிற்கும் மேலாக தேவனாகிய கர்த்தர் இயேசு கிறிஸ்துவுக்கு பயப்படுகிறவர்களாகவும் இருந்து அவர் காட்டும் வழியில் நடப்போமாக!
தேவனுக்கே புகழ் உண்டாகுக!
இறை வாழ்த்து:
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
(2.கொரிந்தியர் 13:14)
#bible #இன்றையவாக்குத்தத்தம் #Psalms #Today's_Promise #Biblescriptures #Bibleverses #reading #biblereading #biblestudy #Oldtestament
#Newtestament
Sun rise with clouds
Photo by Pixabay
Fearful prayer
Photo by Pixabay
In English :
This video is about Today's Promise from the Holy Bible. The book of Psalms says
Who, then, are those who fear the Lord?
He will instruct them in the ways they should choose.(NIV)
Psalms 25:12
Please do subscribe my channel for further biblical videos :
Mei Marai மெய் மறை :
https://www.youtube.com/channel/UCZAKjysDu1-MWKSQvwVs-2Q
My another channels (In Tamil Language) :
Anthuvan Eraikodai:
https://www.youtube.com/channel/UCmrDC5L6ohZX9z4wft6mIsQ
மறத்தமிழ் நாடு (Maraththamizh Naadu):
https://www.youtube.com/channel/UCMvgyCiQ_ysHk2CyUZ6FeyA
Please do subscribe for further music meditation videos Yaazh Music Meditation :
https://www.youtube.com/channel/UCt3g6RPM1ZtT6vXjlw6h1hQ